வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By Ashok
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (12:35 IST)

இலங்கை நீதிக்கான தேடல் என்ற புதிய ஆவணப்படம்:சேனல்- 4 தொலைக்காட்சி வெளியீடு

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற ஆதாரங்களையும் நிரூபிக்கும் வகையில் "இலங்கை நீதிக்கான தேடல் என்ற புதிய ஆவணப்படத்தை சேனல்- 4 தொலைக்காட்சி மூலம் இயக்குனர்  கெலும் மக்ரே வெளியிட்டார்.
 
இலங்கையின் போர்க்குற்றங்களை சேனல்- 4 தொலைக்காட்சி மூலம்  ஆவணப்படங்களை வெளியீட்டு வருகிறது. இதனை வெளியீட்ட ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மக்ரே மற்றொரு ஆவணப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.இந்த ஆவணப்படம் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
 ஈழத்தமிழர்களுக்கு எதிராக  இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை நிருபிக்கும் வகையில் சர்வதேச விசாரணை  இலங்கையில் மேற்கொள்ள வேண்டும் என  இயக்குனர் கெலும் மக்ரே வலியுறுத்தி வருகிறார்.
இலங்கையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை நீதிக்கான தேடல்’என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆவணப்படம், தமிழ், சிங்களம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சில நாட்களில் இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக  இயக்குனர் கெலும் மக்ரே  தெரிவித்தார்.
 
தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்ரீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கெலும் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வருகிறார்.

அமெரிக்கா சென்று, நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தை கெலும் மக்ரே திரையிட்டுக் காண்பிக்கவுள்ளார். அதன் பின்னர், ஜெனிவாவிலும் ஐ.நா தலைமையக வளாகத்தில் இதனை காண்பிக்கவும் கெலும் மக்ரே திட்டமிட்டுள்ளார்.