வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் பைரவர் வழிபாடு !!

பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் தரும். 

பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில்  வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு  பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
 
வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.
 
தினமும் பைரவர் காயத்திரியையும், பைரவி காயத்திரியையும் பாராயணம் செய்து வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து  வடை, பால் தேன் பழம், வில்வம் இலைகளால் மூலமந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணா கர்ஷண பைரவ அஷ்டகம் தன  செழிப்பைத் தரும். 
 
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பெளவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பைரவாஷ்டகத்தை 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். 
 
இவ்விதம் ஒன்பது பெளவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன சம்பத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9 வது பெளவுர்ணமியன்று அவலில் பாயாசம் நைவேத்தியம் செய்யலாம்.
 
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி  அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள்  நிறைவேறுகிறது.