1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை வீணாக்கக் கூடாது ஏன்..?

அம்மன் கோவில்களில் எலுமிச்சை பழத்தை பிரசாதமாக கொடுப்பது உண்டு. இந்த எலுமிச்சை பழம் தெய்வ அருளை பெற்றதால், அதனை நமது வீடுகளில் கொண்டு வந்து வைப்பதுண்டு.
அந்த எலுமிச்சை கனியை நாம் பயன்படுத்தலாமா அல்லது அப்படியே வைத்திருக்கலாமா என்ற சந்தேகம் வருவதுண்டு. இதனை  வாகனங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வைத்துகொள்வதுண்டு. 
 
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட எலுமிச்சை கனிகளை அப்படியே வைத்திருக்க வேண்டியதில்லை. அதனை சாறு பிழிந்து குடிக்கலாம். அந்த  எலுமிச்சை கனி சாற்றில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாமே தவிர அதில் எக்காரணத்தை கொண்டும் உப்பு கலந்து குடிக்கக்  கூடாது.
சாதாரணமாக சிலர் எலுமிச்சை கனியுடன் உப்பு கலந்து குடிப்பார்கள். ஆனால் கண்டிப்பாக கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தில்  மட்டும் அவ்வாறு செய்யக் கூடாது. கோவில் இருந்து பிரசாதமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுவரும் எலுமிச்சை பழத்தை கொண்டு திருஷ்டி  சுத்தி போட பயன்படுத்தக் கூடாது. வீட்டில் உள்ள எலுமிச்சை பழத்தை திருஷ்டி சுத்த பயன்படுத்தலாமே தவிர, கோவிலில் கொடுத்ததை  கண்டிப்பாக அவ்வாறு செய்யக் கூடாது.