செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவலிங்கத்தை பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும்.

சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம், வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள் சிவலோகத்தில்  அனந்தகாலம் வாழ்வார்கள்.
 
சிவலிங்கத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் கோதானமும் செய்த பலன். அஸ்வமேத யாகம் ஆயிரம் செய்தாலும், ஒரு நாள் சிவலிங்கத்தை பூஜை செய்த  பலனுக்கு ஈடாகாது.
 
சிவராத்திரி வேளையில் லிங்கோற்பவ காலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன் ஒரே நாளில் கிடைக்கும்.
 
தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சிவலிங்க  பூஜையினால் முக்தியடைவான். சிவலிங்கத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.
 
பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சிவலிங்கத்தின் சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர். ருத்ர  பாராயணம் செய்துகொண்டே சிவலிங்க பூஜை செய்பவன் சிவகதி  அடைகிறான்.
 
சிவலிங்கம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பல ஆலயக் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழியக் காணலாம்.