1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஸ்படிக மாலையை அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?

ஆன்மிகத்தில் ஸ்படிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது அபரி மிதமான  ஈர்ப்பு சக்தி ஏற்படும். மாதமிருமுறை வெறும் தண்ணீரைக் கொண்டாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும்.

மேலும் ஸ்படிக லிங்கத்திற்கு கெட்ட அதிர்வலைகளை தன்னுள் ஈர்த்து நல்ல அதிர்வலைகளை பரப்பும் சக்தி உண்டு. ஸ்படிக லிங்கம் இருக்கும் வீட்டில் தேவையற்ற மனக்குழப்பங்களும், அச்சங்களும், கவலைகளும் நீங்கி மன அமைதி கிட்டும்.
 
ஸ்படிக மாலை உடல் சூட்டை சீரான அளவில் இருக்க வைக்கும். நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து, அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்துச் செல்லும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு, ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
 
ஸ்படிக மாலையை அனைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம். குளிக்கும் பொழுது, கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.
 
ஸ்படிக மாலையில் கை வைத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தால், அது நல்ல உயர் தரமானது. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் ஸ்படிகம் கண்ணுக்குத் தெரியாது. நீரோடு நீராக ஒன்றி இருக்கும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள்  கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலை தான் நல்ல பலனைத் தரும். பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் வசீகர தன்மை ஸ்படிகத்திற்கு உண்டு.
 
ஸ்படிக மாலையை கையில் வைத்து இறைவன் பெயரை உச்சரித்தபடி தியானத்தில் ஈடுபடலாம். ஸ்படிக மாலையை வாங்கி உபயோகப்படுத்தும் முன், குறைந்தது  3 மணி நேரமாவது சுத்தமான நீரில் ஊறவிட வேண்டும். அதேபோல் ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின், அடுத்தவர் மாற்றி அணியும் போதும் நீரில் 3 மணி  நேரம் ஊறவிட வேண்டும். நம்மால் இயன்ற பொழுது ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைத்தால் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப்  பெறும்.
 
காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர்  ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழற்றி பார்த்தால் உஷ்ணமாகவும் இருக்கும். இதை அணிந்த தருணத்தில் உங்கள் மன, உடல்  அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.