விரதம் இருப்பதால் என்ன பலன்கள்...?
விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நிறைய பேர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும். ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.
சிற்றுண்டிகளை சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பால், பழம் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம் விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது
அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவு உண்பது, நீர், பால், பழம், ஜுஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தி விரதம் இருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். எந்த முறையை பின்பற்றினாலும், பலன் கிடைப்பது நிச்சயம்.
* ஞாயிற்று கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.
* திங்கள் கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.
* செவ்வாய் கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.
* புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
* வியாழன் கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
* வெள்ளி கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
* சனி கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.