வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விளக்கு ஏற்றிய பிறகு செய்யக்கூடாத செயல்கள் என்ன...?

விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை கண்டிப்பாக  செய்யக்கூடாது.

காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப் புறக் கதவைச் சாத்தி விட வேண்டும். விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
 
விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது. விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
 
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
 
வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது. விளக்கேற்றும்போது, விளக்கிற்குப் பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து  வழிபட எல்லா நன்மைகளும் கிட்டும்.
 
விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
 
விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
 
விளக்கு ஏற்றும் நேரம்: காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சா்வ மங்களயோகத்தைத் தரும்.

மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.