ருத்ராட்சத்தின் வகைகளும் அதன் அற்புத பலன்களும் !!
பஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.
த்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.
ஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.
கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.
பதப்படுத்துதல்: புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது.