புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் செல்வம் நிலைக்க இவற்றை செய்யவே கூடாது; அது என்ன...?

எந்த வீட்டில் பெண்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு  திருமகள் குடியேறுவாள்..
வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல  ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
 
எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகலஷ்மி வாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
 
பெண்கள் வலையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. பெண்கள்  தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது. நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
 
பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது. தங்கம் எஅனப்படும் செர்னம் மகாலட்சுமியின் அம்சம்  என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
 
எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறப் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது. 
 
ஒருபோதும் இருட்டிய பின்னர் தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.