வியாழன், 31 அக்டோபர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

உள்ளங்கையில் வாசம் செய்யும் ஸ்ரீலக்ஷ்மி; சொல்ல வேண்டிய மந்திரம்

பயனை கருதாமல், தர்மத்தை அனுஷ்டிப்போர், தர்மம் தெரிந்து, அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர் மற்றும் பசுக்கள், வேத பிராமணர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன்.
காலையில் எழுந்திருக்கும்போதே இன்று என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும. ஆனாலும் தினமும்  எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே  விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம். ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை  விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
 
எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
 
மந்திரம்:  
 
கராக்ரே வஸதே லக்ஷ்மீ 
கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது 
கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்.
 
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும்,  நிஷ்காமியமானது.