1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கார்த்திகை மாதம் ஐயப்ப சுவாமி வழிபாட்டின் சிறப்புக்கள் !!

கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவர்கள்.  அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் 'சுவாமி சரணம்" என்று அடிக்கடி கூறுவார்கள். 

அதில் சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம். சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவாமி என்ற உச்சரிப்பை சொல்லி படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.
 
'ச" என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்ஹாரம் என்று பொருள்.
'ர" என்ற எழுத்திற்கு ஞானத்தை தர வல்லது என்று பொருள்.
'ண" என்ற எழுத்திற்கு சாந்தத்தை தரவல்லது என்று பொருள்.
'ம்" முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களை போக்க வல்லது என்று பொருள். சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.
 
ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து 'ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா" என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள்.