செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (16:14 IST)

பெளர்ணமி விரத முறைகளும் பூஜை செய்யும் வழிமுறைகளும் !!

பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம்.


பௌர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த பௌர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். மேலும் பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களைப் பெற முடியும்.

பௌர்ணமியில் பொதுவாக, அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. பௌர்ணமி அன்று பெண்கள் விரத முறை மேற்கொள்வது சிறப்பு.

மாதத்தில் ஒரு முறை வரும் பௌர்ணமி தினத்தன்று பெண்கள் வீட்டில் விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் மாங்கல்ய பலம் கிட்டும். அத்துடன்  நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தனலாபம் பெருகும் , குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள்.