செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (11:32 IST)

பொது காரியங்களில் ஆர்வமுள்ள மகர ராசிக்காரர்களே! - மார்ச் மாத ராசிபலன்கள் 2024!

Monthly astro
கிரகநிலை:
ராசியில்  ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சனி -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராஹூ  - சுக  ஸ்தானத்தில் குரு  -  பாக்கிய ஸ்தானத்தில் கேது -  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
14-03-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-03-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-03-2024 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-03-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
பொது காரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள். இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.

கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

அரசியல்துறையினருக்கு    கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

திருவோணம்:
இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகளையும் காரிய வெற்றியும் வந்து சேரும். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

அவிட்டம் - 1, 2 பாதங்கள்:
இந்த மாதம் வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16