1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வெள்ளெருக்கு விநாயகரின் மகிமை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வாசல் உள்ள வீடுகளின் வாஸ்து பிரச்சனை போக்கும் வெள்ளெருக்கு விநாயகர். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு  விநாயகரை வழிபட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும்.

சூரியனின் ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி. எருக்கம் பூவை வைத்து விநாயகருக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க பயன்படுகிறது. 
 
வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம்.  விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும் பணவரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
 
இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. சைவ உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக நிலை விளக்கம்தான். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். 
 
சொர்ண கணபதி மந்திரம் சொல்லி வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தனம் ஆகர்ஷணம் ஆகும். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம்  முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம்.
 
விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்கினால் மிக  சிறப்பு.