ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (15:59 IST)

மிகுந்த நன்மைகளை பெற்றுத்தரும் கார்த்திகை மாத விளக்கு வழிபாடு !!

கார்த்திகை மாதத்தில், பல சிறப்புகளும் மகிமைகளும் நடந்திருக்கின்றன என்கிறது புராணம். எனவே, கார்த்திகை மாதத்தில், ஆலயங்களுக்குச் செல்வதும் வீட்டில் தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி வைத்து வழிபடுவதும் மிகுந்த நன்மைகளைத் தந்தருளும்.

கார்த்திகை மாதம் 29-ம் தேதி மாத கடைசி நாள் இன்று. செல்வங்கள் பெருகும் பொன்னான புதன் கிழமை. புதன் கிழமை நவகிரகங்களில் ஒருவரான புத பகவானுக்கு  உரிய நாளாகக் கொள்ளப் படுகின்றது.
 
புத பகவான் அருளால் இந்த நாள் சுபிட்சம் தரும் நாளாக அமையட்டும். இன்று கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி....ஏகாதசியும் துவாதசியும் மகாவிஷ்ணுவிற்கு உகந்த நாள்.
 
இன்றைய தினத்தை புத பகவான், பெருமாள் பரமசிவன், பார்வதி தேவி,  ஆகியோரை வணங்க உகந்த நாளாகும். இந்த நாள் துன்பங்கள் கலைந்து இன்பங்கள் பெருகும் நாளாக அமைந்திட சகல தெய்வங்களையும் வணங்கி வளம் பெறுவோம்.
 
கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். 
 
நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.