புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வீட்டின் பூஜை அறை எவ்வாறு அமைக்கக் கூடாது...?

வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது. தினமும் பூஜை அறையில் மந்திர உச்சாடனம் செய்யவேண்டும். இவை வீட்டில் நேர்மறை  எண்ணங்களை கொண்டுவரும்.
ஒரு வீட்டில் அதிக தளங்களை கொண்டிருந்தால், பூஜை அறையை கீழ் தளத்தில் அமைப்பது உத்தமம். அதில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து அமைந்திருக்க வேண்டும். மேற்கு நீக்கியும் இருக்கலாம்.
 
வடகிழக்கு பகுதியின் மூலையில், ஒரு பித்தளை செம்பில் நீர் வைக்கவேண்டும். இந்த நீரை தினமும் மாற்றி வைப்பது மிகவும் உத்தமம்.
 
தென்கிழக்கு மூலையில் குத்துவிளக்கு வைத்து தீபம் ஏற்றவேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படங்களை கட்டாயமாக வைக்ககூடாது.
 
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையின் சுவரின் நிறம் வெள்ளை, மஞ்சள் அல்லது நீல  நிறத்தில் இருக்க வேண்டும்.
பூஜை அறையை வழிபடுவதற்கும், தியானம் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடம் பற்றாக்குறையின் காரணமாக அலமாரியை பூஜை அறையாக பயன்படுத்துவர் இதில் எந்த தவறும் இல்லை. அவ்வாறு பயன்படுத்திய பிறகு பூஜை அறையை  மூடியே வைக்கவேண்டும்.
 
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை வெளிப்புறமாக திறக்கும்படி அமைக்கவேண்டும். பூஜை அறை  மாடிபடிகளில் கீழ் அமைந்திருக்க கூடாது.