துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கும் மந்திரம்....!

முருகப் பெருமானை வணங்குதல் தமிழர்களிடையே தொண்டு தொட்டு இருந்து வரும் வழக்கம். முருகன் அல்லது கந்தன், குமரன் சிவபெருமான் பார்வதி தேவியின் புதல்வர், விநாயகப் பெருமானின் தம்பி. தமிழில் முருகன் என்றால் அழகு, இளமை ஆகியவற்றைக்  குறிக்கும்.  
முருகனுக்கு, கார்த்திகேயா, சுப்பிரமண்யா, தண்டாயுதபாணி, சண்முகா எனப் பற்பல பெயர்கள் உண்டு. முருகனுக்கு ஆறு முகங்கள்  இருப்பதால் அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு.
 
நமக்கு நன்மை செய்பவர்கள் யார், தீமை செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய பிரச்சனைகளில் இருந்து  விடுபட அற்புத “முருகப் பெருமான் மந்திரம்” உள்ளது.
 
மந்திரம்: ஓம் ரீங் வசரஹணப
 
சித்தர்களால் இயற்றப்பட்ட முருகனுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் உங்களால் இயன்ற போதெல்லாம் துதிப்பது நல்லது. செவ்வாய் கிழமைகள், சஷ்டி தினங்களில் முருகப்பெருமானுக்கு செந்நிற பூக்களை சமர்ப்பித்து இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் 1008 முறை உரு ஜெபித்து வழிபட்டு வந்தால் உங்களின் பாப கர்மவினைகள் நீங்கும். நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் உங்களுக்கு  எதிராக செய்யும் எத்தகைய சதிசெயல்களும் உங்களை பாதிக்காமல் காக்கும்.
 
துஷ்ட சக்திகள் உங்களை அணுகாமல் காக்கும். வீரம் மிகுந்த தமிழ் மக்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் முருகப்பெருமான். உலகில் இருக்கின்ற தீய சக்திகளை அழித்து, நல்லவர்களை காக்க சிவபெருமானால் தனது யோக சக்தி மூலம் தோற்றுவிக்கபட்டவர் சரவணன் எனும்  முருகன். 
 
முருகனின் பெயரை கூறிய மாத்திரத்திலேயே நம்மை பீடித்த அனைத்து வல்வினைகளும் நீங்கும். சித்தர்கள் அருளிய இந்த அதி அற்புதமான  மந்திரத்தை தினமும் துதிப்பவர்களுக்கு முருகனின் முழுமையான அருள் கிடைத்து அவர்களின் வாழ்வில் தீவினைகள் நீங்கி, நன்மைகள்  உண்டாகும்.


இதில் மேலும் படிக்கவும் :