1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஜாதக ரீதியான சில தோஷங்களை நீக்க ராமாயணத்தில் எந்தெந்த கட்டத்தை படிக்க வேண்டும் தெரியுமா...?

ஜாதக ரீதியான சில தோஷங்கள்- குறைகள், நீங்குவதற்காக ராமாயணத்தில் எந்தெந்த கட்டத்தைப் படிக்க வேண்டும் என்று பரமசிவன், பார்வதியிடம் கூறுவதாக அமைக்கப் பட்டிருக்கும்  ஸ்லோகங்களும் அந்த நூல்களில் காணப்படுகின்றன.
 

சூரிய தசை தோஷம் செய்யக்  கூடியதாக ஒருவனுக்கு இருக்குமேயானால், அவன் பரமசிவன், கங்கையை தனது தலையில் தாங்கிய கட்டத்தைப்  படிக்க வேண்டும்.
 
சந்திர தசையில் குஜ அபவாத தோஷ பரிகாரம் என்பதற்கு விச்வாமித்திரர், ராம, லக்ஷ்மணர்களை அழைத்துக் கொண்டு போகும் கட்டங்களைப் படிக்க வேண்டும். 
 
சந்திர தசையில் குரு புத்தி தோஷத்தின் பரிகாரத்திற்காக வால்மீகி முனிவருக்கு  ராம கதையைச் சுருக்கமாக  நாரதர் உபதேசித்த கட்டத்தை ப் படிக்கவேண்டும். 
 
சந்திர தசையில் ராகு  புக்தி தோஷத்தின் பரிகாரத்திற்காக  அஹல்யையின் சாப விமோசன  கட்டம் படிக்கப் பட வேண்டும்.. 
 
ராகு தசையில்  சூரிய புத்தி தோஷத்தின்  பரிகாரத்திற்காக  தசரதரின் வம்ச பரம்பரை அதாவது  சூரிய வம்ச பரம்பரையைப் படிக்க வேண்டும். 
 
ராகு தசையில் கேது புத்தி தோஷத்தின் பரிகாரத்திற்காக ராமர், அம்பை எய்தி தெய்வ உலகங்களை  அடையக் கூடிய பரசுராமரின் வல்லமையைப் பறித்த கட்டம் படிக்கப் பட வேண்டும். 
 
சனி தசை தோஷ பரிகாரத்திற்கு விச்வாமித்திரருடைய யாகத்தில் ராக்ஷஸர்கள் வதம் செய்யப் பட்ட கட்டம் படிக்கப்பட வேண்டும்.