திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வலம்புரி சங்கை வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்...!!

எந்த ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம்  செய்வாள்.

* வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்  என்பது ஐதீகம்.
 
* வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில், நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
 
* வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை வலம்புரிச் சங்கில் இட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தெளித்து வர தோஷம் விலகி நலம்  உண்டாகும்.
 
* செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி, திருமணம் நடைபெறும்.
 
* பவுர்ணமி தோறும் வலம்புரிச் சங்குக்கு, குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டாலும் கடன் பிரச்சினை அகலும்.
 
* சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு கொண்டு பூஜிக்கப்படும் வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது. நாம் வழிபடும் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால், 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம்.
 
* பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், வலம்புரிச் சங்கில் நீர் ஊற்றி, அதில் ருத்ராட்சம் இட்டு, அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட காய்ச்சல் நீங்கும். பூஜை  அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவு பஞ்சம் ஏற்படாது.