வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (15:24 IST)

கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம் !!

பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும்.


செல்வ செழிப்புடன் வாழவும், எதிரிகளின் தொல்லை விலகவும் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதும் பைரவர் வழிபாடுதான்.

தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார்.

பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை நிவர்த்தி ஆகும்.

அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்:

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

ஸ்லோகம்:

ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத் !