1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:16 IST)

திருவோண நட்சத்திரத்தன்று விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்துக்கு சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும்.


காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.

திருவோண விரதம் இருப்பதால் கல்விச் செல்வம், மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும். திருவோண விரதத்தன்று நாம் இறைவனுக்கு நெய்வேதனம் செய்வது வழக்கம். சுண்டல் பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் நன்மைகள் நடக்கும்.

திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷ மான வாழ்வு அமையும்.12 திருவோணம் நாட்களில் விரதம் இருந்தால் வாழ்வில் செழிப்பின் உச்சத்துக்கே போய் விடுவீர்கள்.