செவ்வாய், 25 ஜூன் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:37 IST)

வீட்டில் தினமும் பஞ்சகவ்ய விளக்கை ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் !!

Panjakavya vilakku
பஞ்சகவ்யம் என்பது பசுவில் இருந்து கிடைக்கும் 5 பொருட்களை குறிப்பிடுவது. அந்த 5 பொருட்கள் பசுஞ்சாணம், பசுங்கோமியம், பசும்பால், பசுந்தயிர், பசு நெய் இந்த 5 பொருட்களின் கலவை தான் பஞ்சகவ்யம்.


பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது யாகம் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் இதில் கிடைக்கிறது. அது மட்டுமின்றி இதனால் நம்மை சுற்றி உள்ள அனைத்து நெகடிவ் எனர்ஜிகளும் நம்மை விட்டு அகன்று விடுகிறது.

இதனால் நமக்கு நம்முடைய முக்கிய தேவைகளான ஆரோக்கியமான, அமைதி, செல்வ வளம் இவை அனைத்தும் தடங்கல் இன்றி நம்மை தேடி வரும்.

இந்த பஞ்ச கவ்ய விளக்கில் உள்ள பொருட்களால் கூடுதல் நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. பஞ்சகவ்யம் பஞ்ச பூதங்களை சமநிலை படுத்தும்.

ஒரு பித்தளை தட்டில் அல்லது வெற்றிலை அல்லது மண்விளக்கில் உள்ளே வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய்யை ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றுவது போலே பஞ்சகவ்ய விளக்கை ஏற்றவேண்டும்.

விளக்கு ஏற்றிய பின்னர் விளக்கும் சேர்ந்து எரியும் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் எரிந்த பின்னர் விளக்கில் இருந்து யாகம் செய்யும் போது வரும் புகையை போல் புகை வரும் அந்த புகை வீடு முழுவதும் பரவி நல்ல பயன் தரும் மற்றும் எரிந்து முடித்தவுடன் அந்த விளக்கில் உள்ள சாம்பலை திருநீறுடன் கலந்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம். அல்லது செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.