1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (13:57 IST)

பௌர்ணமி தினத்தில் அம்பாள் வழிபாட்டு பலன்கள் !!

அம்பிகைக்கு உரிய பௌர்ணமி தினத்தன்று அனைத்து அம்பாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


பௌர்ணமி தினம் விரதம் மேற்கொண்டு, மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் அம்பிகைக்கு சிறப்பு ஆராதனையுடன் தேவியை குறித்த பாடல்களான அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, தேவி கட்கமாலா, லலிதா நவரத்ன மாலை ஆகியவற்றை பாராயணம் செய்வது விசேஷம்.

கண்டிப்பாக, பூஜையின் நிறைவில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு&நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது. இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம்.

பௌர்ணமி தினத்தில் நிலவில் அம்பாள் அல்லது குரு இருப்பதாக நினைத்து த்யானம் செய்ய வேண்டும். அம்பிகையின் அருள் கிடைக்கும். மனம் சாந்தி பெறும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பூமி சூரியனை சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது.

பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி ஆகும். சந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை ஆகும்.