வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பலவகையான தூபங்களும் அற்புத பலன்களும் !!

சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். அகில் தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
 


மருதாணி விதைகளில் தூபமிட சூனிய கோளாறுகள் விலகும். தூதுவளையில் தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.
 
சந்தனத்தில் தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அருகம்புல்லில் தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.
 
வெட்டிவேரில் தூபமிட காரியசித்தி உண்டாகும். வேப்பிலையில் தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
 
வெண்கடுகில் தூபமிட பகைமை விலகும். வெண்குங்கிலியத்தில் தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
 
ஜவ்வாதில் தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும். நாய் கடுகில் தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.
 
துளசியில் தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.