ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

மனிதன் என்பவன் முதலில் வெளிப்போர்வையான ஸ்தூல உடல், இரண்டாவது மனம், புத்தி. நாம் உணர்வு இவற்றைக் கொண்ட சூட்சம உடல் இவற்றால் ஆக்கப்பட்டவன் என்பதைக் காண்கிறோம். இவற்றிற்கு பின்னால்தான் மனிதனின்  உண்மையான ஆன்மா இருக்கிறது.
என்னுடைய எல்லையற்ற முற்பிறவியின் பயனே. இப்போது இங்கே இருந்து கொண்டிருக்கும் நான். என் மறுபிறவிகளை  நினைவுபடுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன? இருந்தாலும் சிலருக்கு தங்கள் முற்பிறவியின் நியாபகம் வருகிறது.
 
நம்முடைய உடல் மட்டும்தான் பரம்பரையாக முன்வினை பயனால். குறித்த ஓர் உடலில் நாம் பிறக்கிறோம். நம்முடைய ஆன்மாவை தங்கள் குழந்தையாக பெறுவதற்கு தகுதியுள்ள பெற்றோர்கள் அந்த உடலுக்கான உருவத்தை மட்டுமே  கொடுக்கிறார்கள்.
 
உடல் அழியும்போது ஆன்மாவிற்கு வழிகாட்டுவது எது? அது முதலிலிருந்து செய்த செயல்கள். நினைத்த எண்ணங்கள் ஆகியவற்றின் மொத்த பலனே. இந்த பலன். மனம் இன்னும் அனுபவம் பெறுவதற்காக புதிய உடலை எடுக்கும் அளவிற்கு  இருந்தால், அந்த உடலுக்கு தேவையாக மூலப்பொருட்களைத் தருவதற்கு தகுதியாக இருக்கும் பெற்றோர்களை நாடிச்  சொல்கிறது. இவ்வாறு அது ஓர் உடலைவிட்டு மற்றோர் உடலுக்கு தாவுகிறது.