வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஆன்மிகம் மட்டுமல்லாமல் வாழ்வியல் அறம், மனிதனின் நடத்தை, சமூக நன்னெறிகள் என நமக்கு கீதை தரும் பாடங்கள் ஏராளம்.

 
* மனிதன் சினத்தால், அதாவது கோபத்தால், மயக்கம் அடைகிறான். மயக்கத்தால் நினைவு தவறுகின்றான். நினைவு தவறுதலால் புத்தி நாசம் அடைகின்றான். புத்தி நாசத்தால் அழிகின்றான்.
 
* தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன். தன்னைத் தான் வெல்லாதவனே தனக்குத்தான் பகைவன் போல் கேடு  சூழ்கின்றான்.
 
* இறைவன் எல்லா உயிர்களுக்கு சமமானவன். இறைவனுக்குப் பகைவனும் இல்லை.  நண்பனுமில்லை. அதனால் இறவனைத் தொழுவோர் இதயத்தில் இறைவன் குடிகொண்டிருக்கின்றான்.
 
* எந்த எந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை வழிபட விரும்புகின்றானோ, அவனுடைய அசையாத  நம்பிக்கைக்குத தக்க வடிவத்தைக் கடவுள் மேற்கொள்கின்றார்.
 
* தொழில் செய்யத்தான் மனிதர்களுக்கும் அதிகாரம் உண்டு. அதன் பலன்களில் எப்போதுமே மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை.  தொழில் செய்கையில் பலனை கருதக்கூடாது. தொழில் செய்யாமலும் இருக்காக் கூடாது.