புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (18:19 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். 

பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை காயத்ரி சொல்லி தினமும் துர்க்கையை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.