1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (10:31 IST)

மே 2022 - 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த ஒரு வேலையும் மிகவும் சரியாக நடக்க வேண்டும் காலத்தை வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும்  தீர்க்கும் வல்லமை ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல  பலன் அடைவார்கள். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். 
 
பரிகாரம்: முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.