ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26


Abimukatheesh| Last Modified வியாழன், 1 ஜூன் 2017 (21:02 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளிலிருந்து நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். 

 

 
மனஇறுக்கம் விலகும். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வேற்றுமதத்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை அமையும். சகோதரிக்கும் திருமணம் கூடி வரும். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். 
 
அதற்கான வழிவகைகள் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தள்ளிப் போன அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அவ்வப்போது மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் வந்துப் போகும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். தந்தையாருக்கு கை, கால் வலி, அசதி வந்துப் போகும். அவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும். பணப்பற்றாக்குறை ஏற்படும். 
 
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். 
 
கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோக ஸ்தானாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். 
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். புதிய நட்பால் முன்னேறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 8, 5, 6, 14, 15
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கருநீலம்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி


இதில் மேலும் படிக்கவும் :