ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25


Abimukatheesh| Last Modified வியாழன், 1 ஜூன் 2017 (20:58 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சாதனையாளர்களின் நட்பு கிடைக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள்

 

 
வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் அடங்கும். புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தெலுங்கு, உருது பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். 
 
புது மனை புகும் அமைப்பு உருவாகும். மாதத்தின் மையப் பகுதியில் சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். தந்தைவழியில் நன்மை உண்டாகும் வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். உங்களுடைய அறிவாற்றலையும், திறமையையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். 
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் உங்களின் வேகத்தைக் கண்டு வியப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். 
 
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.     
 
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 15
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, கிரே
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்


இதில் மேலும் படிக்கவும் :