ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23


Abimukatheesh| Last Modified வியாழன், 1 ஜூன் 2017 (20:47 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். 

 

 
பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புதிதாக வீடு கட்டி குடிப்புகுவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். 
 
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களேஸ நல்ல பதில் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள். 
 
பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேற்றுமொழி, மதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பிற்பகுதியில் செலவினங்கள் கூடிக்கொண்டேப் போகும். சில நேரங்களில் எதிர்காலத்தை நினைத்து சின்ன சின்ன பயம் வரும். பிள்ளைகளிடம் உங்களின் பழங்கதைகளை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். 
 
அரசியல்வாதிகளே! கட்சியில் முக்கிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கடையை விரிவுப்படுத்துவீர்கள், வேலையாட்கள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். 
 
கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு பரிசு, பாராட்டுக் கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் மாதமிது.       
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 17, 26
அதிஷ்ட எண்கள்: 3, 8
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை 
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி


இதில் மேலும் படிக்கவும் :