ஜூலை 2021 - 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே! இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். பெண்கள் உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.