மே மாத எண்ணியல் பலன்கள் - 7, 16, 25
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சொல்லாற்றல் மிக்க ஏழாம் எண் அன்பர்களே நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றலும் மிக்கவர். இந்த வாரம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும்.
கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். பெண்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.