மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் 63 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்ததால் பரபரப்பு..!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை 95 ரூபாய் உயர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 63 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் நகை வாங்கும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 95 ரூபாய் உயர்ந்து 7,905 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 760 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய் 63,240 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,623 எனவும் ஒரு சவரன் ரூபாய் 68,984 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
Edited by Siva