இல்லற வாழ்க்கை இனித்திட...

WD
விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இப்போது புதிய முயற்சியாக, இல்லற வாழ்க்கை இனித்திட... என்ற தலைப்பில் 10 அறிவுரைகளை தமிழில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளன.

இந்த அறிவிப்பு, முதன்மை குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும் அனைவரது கண்ணில்படும்படி வைக்கப்பட்டு உள்ளது. .

இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ள் வராது. அ‌ப்படியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது.

நீ‌ங்களு‌ம் ‌திருமணமானவராக இரு‌ப்‌பி‌ன் இவ‌ற்றை படியு‌ங்க‌ள். ‌பி‌ன்ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் இ‌ல்லற‌ம் ந‌ல்லறமாகு‌ம்.

* ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

* வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

* விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

* கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

* உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

* விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

* ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

* செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். மேலு‌ம்,

இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவ‌ற்றை எ‌ப்போது‌ம் மன‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்)

சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்

அனுசரித்துப் போகுதல்

மற்றவர்களை மதித்து நடத்தல்.

இந்த அறிவுரைகளில் முத்தாய்ப்பாக 10-வது அறிவுரையில் மட்டும் ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அறிவுரைகளை, விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் வரும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் ஆர்வத்துடன் படித்து செல்கிறார்கள். இந்த அறிவுரைகள், சில தம்பதிகள் வாழ்க்கையிலாவது மாற்றத்தை ஏற்படுத்தினால், அதுவே இந்த புதிய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

Webdunia|
நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளில், விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு உ‌டனடியாவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்து ‌விவாகர‌த்தவழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசைவழ‌ங்க‌ப்படு‌கிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள். முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ளமுயற்சி செய்கின்றன. இறு‌தி வரவிவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.
இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ந‌ம் வா‌ழ்‌க்கை ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :