அவள் எனக்கு என்ன உறவு?

சிரவணன்

Webdunia|
"சிவா... எங்கடா போற..."
"என் பின்னால வாடா." கடைத் தெருவின் மூலையில் இருந்த ஆசாரி கடையை நோக்கி நடந்தான் சிவா. அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க, நீண்ட முடியும் புஷ்டியான கன்னமும் கொண்ட மாநிற நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

"ஸ்ரீனிவாசன் சார், மரகதம்மா வீடு எங்க இருக்கு?" அதிர்ந்தது ஸ்ரீனிவாசன் மட்டுமல்ல; ராஜாராமும் கூட.
"யாரப்பா நீ? என் பேரு எப்படி தெரியும்?"

"இல்லைங்க... அங்க ஒரு டீக்கடைல சொன்னாங்க, உங்க கிட்ட கேட்டா, மரகதம்மா அட்ரஸ் சொல்வாருன்னு." சமாளித்தான் சிவா.
"ஓ... ஆமா, எந்த மரகதம்மா?"

"ரொம்ப வருஷத்துக்கு முன்ன, இந்தத் தெருவோட கடைசி வீட்டுக்கு முன்னாடி வீட்டுல இருந்த ராமநாதன்ற பெரியவர் இருந்தாரு. அவருகூட இங்க பெரிய அளவுல பால்பண்ணை வெச்சுருந்தாரு. அவரோட மகள்தான் மரகதம்."
ஸ்ரீனிவாசன் யோசித்தார். சிவாவை அண்ணாந்து பார்த்தார்.

"தம்பீ... நீ சொல்றது ஒரு இருபத்து அஞ்சி இருபத்து ஆறு வருஷம் முன்னாடி இருக்குமா?"

'ஆமாண்ட சக்கர' என்று ஸ்ரீனிவாசனின் தோளில் தட்டி சொல்ல வேண்டும்போல் இருந்தது.
"ஆமாங்க."

"எதுக்குப்பா கேக்குற?"

"இல்லை. நாங்க சென்னைல இருந்து வர்றோம். கவிஞர் சாரதிப் பித்தனைப் பத்தி ஆராய்ச்சி ஒண்ணு பண்ணுறோம். அவருக்கு எதிர் வீட்டுலதான் மரகதம்னு ஒருத்தங்க இருந்ததா கேள்விப்பட்டோம். அவங்ககிட்ட பேசினா நிறைய தகவல் கிடைக்கும்னு வந்தோம்."
"தம்பிங்களா இப்படி உட்காருங்க." இரண்டு நாற்காலி போடப்பட்டது. இருவரும் அமர்ந்தனர்.

"டேய் பரமு, இரண்டு கலரு வாங்கிட்டு வாடா." சிறுவனை அதட்டினார் ஸ்ரீனிவாசன்.
"தம்பி... கோவிந்தன் எனக்கும் சினேகிதன்தாம்பா. அதோ தெரியுது பாரு, அந்த ரோட்லதான் காளை முட்டி செத்தான். கவிதை கவிதைன்னு ஏதேதோ எழுதுவான். சென்னைல இருக்குற பத்திரிகைக்கு எல்லாம் அனுப்புவான். ஆனா, யாருமே அவன கண்டுகிட்டது இல்ல. மரகதம்தான் அவன் பின்னாடியே சுத்திட்டு இருப்பா.
அவன் செத்தப்புறம், அவன் எழுதி எப்பவோ அனுப்புன கவிதை ஒண்ணு ஆனந்த விகடன்ல வந்தது. அப்புறம், யாரோ ரெண்டு பேரு சென்னைல இருந்து கோவிந்தன் வீட்டுக்கு வந்தாங்க. அவன் வீட்டு பரண்ல இருந்த கவிதை பேப்பர், நோட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு போனாங்க. அப்புறம் பாத்தா, கோவிந்த வீட்டுக்கு பணமழை பேஞ்சுது. கவர்மென்டெல்லாம் விருது கிருதுன்னு எதேதோ கொடுத்துச்சு.."
"சரிங்க, மரகதம்..." இழுத்தான் சிவா.

"ட, அந்த பொண்ணை ஏம்பா கேக்குற. அது யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒத்த கால்ல நின்றுச்சு. யாரு சொல்லியும் கேக்கல. பாவம், அவனையே நெனைச்சுகிட்டு திறிஞ்சுது. இப்ப... நம்ம திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் இருக்கு இல்லியா... அங்க ஏதாவது படிக்கட்டு கிட்டதான் பொம்மை வியாபாரம் பண்ணிக்கிட்டு ஏதோ ஒரு குடிசைல தனியா இருக்குது."
இதயம் ஒருகணம் செயலிழந்துவிட்டது.

என்னப் பேசுவது? என்ன யோசிப்பது? என்ன செய்வது? எதுவும் தெரியாத மனநிலை.இதில் மேலும் படிக்கவும் :