அவள் எனக்கு என்ன உறவு?

சிரவணன்

Webdunia|
நண்பன் ராஜாராமிடமாவது சொல்லிவிடலாமே? அப்போதுதான் அவனை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்வது எளிதாகிவிடும்.

"ராஜா..."

"என்ன மச்சான்?"

"இந்த முன்ஜென்மம், முற்பிறவி இதுல எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்காடா?"

"அதப் பத்தியெல்லாம் யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுல்லடா."
"நான் முன்ஜென்மத்துல யாருன்னு என்னாலா உணர முடியுதுடா?"

"வாட்..? ஹா ஹா... யாருடா?"

"சாரதிப் பித்தன்."

"அப்ப, நான் ஷேக்ஷ்பியர்,"
"ஜோக்கடிக்காத. சீரியஸா பேசுறேன்."

"டேய்... நேத்து டி.வி.யில் 'நெஞ்சம் மறப்பதில்லை', இல்லைன்னா 'எனக்குள் ஒருவன்' பாத்துருப்ப. இல்ல... டிவிடி-ல ஏதாவது பிரெஞ்ச், ஜெர்மென் படம் பார்த்துருப்பா. ஓவரா... கதை உடாம நாளைக்கு செமஸ்டருக்கு படி மகனே..."
"சாரதிப் பித்தனோட கவிதை சொல்லட்டுமா?"

"ஆறாங்கிளாஸ் பையன் கூடதான் சொல்லுவான். அவன் போன ஜென்மத்துல சாரதிப் பித்தனா?"

"டேய்... நான் சாரதிப் பித்தனோட புகழ் வேணுன்னு எல்லாம் விரும்பல. அவனோட காதலி, அதாவது, என்னோட போன ஜென்மத்துக் காதலிய பாக்க விரும்பறேன். வர்ற சண்டே ஸ்ரீரங்கம் போறேன். வரதா இருந்தா வா..." ராஜாவின் வாயிலிருந்த சிகரெட்டை பிடுங்கி தரையில் இட்டு அணைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
".....?!?"


திருச்சி பேருந்து நிலையத்தில் வந்தடைந்த இருவரும், ஸ்ரீரங்கம் போகும் பேருந்தில் ஏறினர்.

"டேய், இந்த சினிமால, கதைல வர்ற மாதிரி 'டேய் இந்த இடத்துக்கு நான் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு', 'இந்த குளத்துலதான் குளிப்பேன்', 'இந்த சலூன் கடைலதான் முடி வெட்டிப்பேன்...' இப்படியெல்லாம் டயலாக் விடக்குடாது சரியா?"
"ரொம்ப பேசாதடா... டேய்... அந்த ஆலமரம் இன்னும் இருக்கு பாருடா?" ஆர்வத்துடன் ஜன்னலோரத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மரத்தைக் காட்டினான்.

"இதத்தாண்டா நான் சொன்னேன். அந்த மரத்தை சுத்திதான் நீயும் உன் போன ஜென்மத்து ஃபிகரும் டூயட் பாடுணீங்களா?"
"ஓவரா நக்கல் பண்ணாதடா? அவங்க இப்ப எப்படி இருப்பாங்ன்னு தெரியாது. அவளுங்கு பேரன், பேத்திங்களா கூட இருக்கலாம். ஜஸ்ட் ஒரு ரிசர்ச்சுக்காக வந்துருக்கோம். கவிஞர் சாரதிப் பித்தனைப் பத்தி தெரிஞ்சா சொல்லுங்கன்னு கேளுடா."
"ஏன் நீ கேக்க மாட்டியா?"

"சொன்னா புரிஞ்சிக்க, நீயே கேளு. எவ்ளோ நேரம் பேச்சுக் கொடுக்க முடியுமோ கொடு. சாரதிப் பித்தனைப் பத்தி எவ்ளோ கேக்க முடியுமோ கேளு."

"சரிடா. பட், இங்கேயே டேரா போட்டுடாத. இன்னைக்கு ஈவினிங்கே கிளம்பணும்."
ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம்.

சிவாவும் ராஜாராமும் இறங்கினர்.

கால் பாதங்கள் சில்லிட்டன, சிவாவுக்கு. அனிச்சையாக, இடது பக்கம் அவனது கண்கள் திரும்பின. அங்கே, ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருந்தது. அதே பிள்ளையார் கோயில்.
"யார்கிட்டடா அட்ரஸ் கேட்கிறது? என்ன பேரு சொன்ன? மங்கம்மாவா?"

"எதுவும் பேசாம என் பின்னால வாடா. அவங்க பேரு மரகதம்."

சிவாவின் கால்கள், அந்த விசாலமான பாதை கொண்ட கடைத் தெருவில் நடந்தன. ராஜாராம் பின் தொடர்ந்தான்.
'நான், சாரதிப் பித்தனாய் இருந்தபோது... எனக்காகவே வாழ்ந்தவள். ஒவ்வொரு எழுத்தும் காகிதத்தில் பதிவானதற்கு காரணகர்த்தா. அப்போதைக்கு என் முதலும் கடைசியுமான வாசகி. பெற்றோர்களாலும் உற்றார்களாலும் உதாசினப்படுத்தியபோது, பார்வை ஸ்பரிசத்தாலேயே என் தனிமையை விரட்டியடித்தவள். என் பிரிவை எப்படி தாங்கியிருப்பாள்.
நான் இறந்துவிட்ட பிறகு, எத்தனை வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டிருப்பாள்? என்னை முழுமையாக மறந்துவிட்டிருப்பாளா? நான் தான் உன் காதலன். நான் தான் முற்பிறவியில் உன் காதலன், சாரதிப் பித்தன் என்று சொல்லலாமா? அவள் சிரிப்பாள். ஒருவேளை என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம். அப்படிச் சொல்வதும் முட்டாள்தனமே.'
மனது சிந்தித்தது; கால்கள் நடந்தன; ராஜாராம் இயந்திரம் போல் பின் தொடர்ந்து வந்தான்.இதில் மேலும் படிக்கவும் :