செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (11:54 IST)

Gmail க்கு போட்டியாக வரும் Zmail.? – Zoom நிறுவனத்தின் அடுத்த திட்டம்!

Zmail
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஜிமெயில் சேவைக்கு இணையாக மற்றொரு மெயில் சேவையை தொடங்க ஜூம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் கல்வி, அலுவலக பணிகள் என அனைத்தும் ஆன்லைன் மயமாக மாறியது. அப்போது வீடியோ காலில் மட்டுமே நடந்து வந்த செயல்பாடுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது ஜூம் செயலி.

உலகம் முழுவதும் பல்வேறு வீடியோ அழைப்புகளுக்கும் ஜூம் செயலி உதவிகரமாக இருந்தது. அதன்மூலம் பெரும் வளர்ச்சியையும் எட்டியுள்ளது ஜூம் நிறுவனம். அதை தொடர்ந்து தற்போது இமெயில் சேவையையும் தொடங்க உள்ளது ஜூம் நிறுவனம்.

உலகம் முழுவதும் இமெயில் சேவையில் ஜி மெயில், அவுட்லுக், யாஹூ மெயில் போன்றவை செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் பெரும்பாலானோர் ஜிமெயில் சேவையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜி மெயில் சேவை அளவுக்கு எளிதாக பயன்படுத்தக்கூடிய அளவில் கூடுதல் வசதிகளுடன் ஸீமெயில் என்ற சேவையை தொடங்க ஜூம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜூம் நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பில் இந்த திட்டம் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.