விவோ, ஓப்போ ஸ்மார்ட்போன்: சாம்சங் நிறுவனத்தை மிஞ்சிய வளர்ச்சி!!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கொரியா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது சீனா நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் மட்டும் ஓப்போ, விவோ நிறுவனங்கள் விளம்பரத்திற்காகச் சுமார் 2,200 கோடி ரூபாய் தொகையைச் ஒதுக்கியுள்ளது.
விளம்பரத்திற்காக இந்த நிறுவனங்கள் ஒதுக்கிவைத்துள்ள தொகை சாம்சங், எல்ஜி, வீடியோகான், சோனி ஆகிய நிறுவனங்களை விடவும் அதிகமானது.
இந்த விளம்பரத்தின் மூலம் இந்தியாவில் இந்நிறுவனங்களின் விற்பனை அளவு அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.
இதை தொடர்ந்து ஓப்போ மற்றும் விவோ இந்தியாவில் 6,000 - 20,000 ரூபாய் விலையில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.