அபராதத்தை இனி பேடிஎம்-ல் செலுத்தலாம்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 10 ஜூன் 2017 (14:53 IST)
சாலை விதிகளை மீறும் போது டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராதத்தை பேடிஎம்-ல் செலுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

 
 
மத்திய அரசு அனைத்து வசதிகளையும் சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. மொபைல் பேமண்ட் எனப்படும் பேடிஎம் நிறுவனத்துடன் தேசிய டிராபிக் போலீஸார் கைகோர்த்துள்ளனர். 
 
எனவே, இனி டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராததை ஆன்லைனில் செலுத்தலாம். அபராத பணத்தை செலுத்தியவுடன், டிஜிட்டல் இன் வாய்ஸ் குறிப்பிட்ட போலிஸ் அதிகாரிக்கு அனுப்பப்படும். 
 
பின்னர், தொகை பெறப்பட்டதும், அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ஆவணங்கள் அனைத்து தபால் மூலம் அவரை வந்து சேரும்.


இதில் மேலும் படிக்கவும் :