ரூபாய்க்கு நிகரான நிமிடங்கள்: ஏர்டெல் அதிரடி!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 5 டிசம்பர் 2016 (12:50 IST)
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வாலட் மற்றும் ஏர்டெல்​ மணி (Airtel Money) சேவைகளை தொடர்ந்து, தற்போது பேமண்ட் வங்கிச்​ சேவையிலும் ஈடுபட்டுள்ளது.

 
 
ஏர்டெல் பேமண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்படடுள்ளது.
 
இந்நிலையில், ஏர்டெல் பேமண்ட் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு திறக்கும் ஏர்டெல் சந்தாதாரருக்கு, டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கு நிகரான நிமிடங்களுக்கு டாக்டைம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
அதாவது ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியின் சேவிங்ஸ் அக்கவுண்டில் ரூ.500/- டெபாசிட் செய்தால் ஏர்டெல் தொலைபேசி எண்ணிற்கு 500 நிமிடங்க்ளுக்கான டாக்டைம் கிடைக்கும்.
 
இதை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள எந்த எண்ணிற்கும் அழைக்கலாம். எனினும், இந்த நன்மை வங்கியில் முதல் முறையாக டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டுமே.


இதில் மேலும் படிக்கவும் :