1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 மே 2017 (10:44 IST)

ரூ.148க்கு 70ஜிபி: ஜியோவை மிஞ்சும் இந்த நிறுவனம்!!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவை மிஞ்சும் வகையில் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 


 
 
சூப்பர் வேல்யூ டாரிஃப் பிளான் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 70 ஜிபி அளவு 4ஜி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
அதாவது, வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ரூ.50 டாக்டைம், நிமிடத்திற்கு 25 பைசா என்ற கட்டணத்தில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 
 
ரிலையன்ஸ் டூ ரிலையன்ஸ் அழைப்புகள் 6 நொடிக்கு 1 பைசாவும், வெளியூர் அழைப்புகளுக்கு 2 நொடிகளுக்கு 1 பைசா என்ற வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.