4ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் 3 மாத அன்லிமிட்டட் டேட்டா பேக் இலவசம்


Sugapriya| Last Modified புதன், 6 ஜூலை 2016 (12:49 IST)
LYF 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் 3 மாத அன்லிமிட்டட் டேட்டாவை ரிலையன்ஸ் இலவசமாக வழங்குகிறது

 

 
ரிலையன்ஸ் ஜிஒ 4G நெட்வொர்க்கை ஊக்குவிக்கும் வகையில் Lyf ஸ்மார்ட்போன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜிஒ 4G நெட்வொர்க் குறித்த புதிய அம்சங்களை வெளியிட்டது அதைத்தொடர்ந்து சந்தையில் சிற்று விற்பனை சரிவை கண்ட Lyf ஸ்மார்ட்போன் நிறுவனம், இந்த நிலையில் இருந்து மீள ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்துள்ளது.
 
இரு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து அதன் முதல் ஆஃபர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இப்போது அனைத்து Lyf நிறுவன ஸ்மார்ட்போன்களை வாங்கினால் இலவச வரம்பற்ற டேட்டா(Free Unlimited Data), மற்றும் குரல் அழைப்பு(Voice Calling), ஆகிய சலுகைகளை ரிலையன்ஸ் ஜிஒ 4G நெட்வொர்க்கின் வாயிலாக 3 மாதங்களுக்கு பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து ரிலையன்ஸ் ஜிஒ சிம் கார்ட் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே வாடிக்கையாளரை கவர Lyf ஸ்மார்ட்போன் நிறுவனம், அதன் மொபைல் போன் விலைகளையும் குறைத்துள்ளது. ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,999யில் ஆரம்பம் ஆகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :