லெனோவா கே4 நோட்: உட்டன் பேனல் ஸ்மார்ட்போன்

Sugapriya| Last Updated: வெள்ளி, 15 ஜூலை 2016 (12:38 IST)
லெனோவா நிறுவனம் வைப் கே4 நோட் ஸ்மார்ட்போனின் உட்டன் பேனல் பதிப்பை நேற்று அறிமுகப்படுத்தியது.
லெனோவா கே4 நோட் உட்டன் பேனல் ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கபட்டுள்ளது. டூயல் சிம் ஆதரவு கொண்ட லெனோவா வைப் கே4 நோட் வைப்(Vibe UI) அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குகிறது. 5.5 இன்ச் முழு ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே(5.5 Inch HD IPS Display), 3ஜிபி ராம்(3 GB RAM) உடன் இணைந்து 1.3GHz ஆக்டா கோர் மீடியாடெக் MT6753 ப்ராசசர்(1.3 HHz Octacore Mediatech MT6753 Processor), மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்டுள்ளது.

இதை தவிர லெனோவா வைப் கே4 நோட் பிடிஎஃப் ஆட்டோ ஃபோகஸ்(PDFA Auto Focus), மற்றும் டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்(Duel Tone LED Flash) கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா(13 Megapixel rear camera) மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா(5 Megapixel front camera) கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக ப்ளூடூத்(Bluetooth), FM ரேடியோ, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி(Micro USB) ஆகியவை வழங்குகிறது.

லெனோவா வைப் கே4 நோட் உட்டன் பேனல் ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வழியாக தற்போது ரூ.11,499 என்ற விலையில்  பிரத்யேகமாக விற்பனையில் உள்ளது. 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :