1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 மே 2018 (21:18 IST)

ஜியோவின் புதிய சேவை அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெய்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட பிற முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள போராடி வருகின்றனர்.
 
ஜியோவிற்கு போட்டியாக பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஜியோபோஸ்ட்பெய்ட் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.  
 
இதில் சர்வதேச அழைப்புகள் வெறும் 50 பைசாவில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த சேவை வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சேவையில் ரூ.199க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 25ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த புதிய போஸ்ட்பெய்ட் சேவையில் சிறப்பம்சம் சர்வதேச அழைப்புகளுக்கு குறைந்த கட்டணம்தான்.