ஜியோ இலவச சேவை டிசம்பர் 31 வரை நீடிக்கும்

Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (12:43 IST)
அறிமுக சலுகையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு பின் சிம் ஒன்றை பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்காது என்ற அறிவிப்பை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டது. 

 
இதன் மூலம் டிசம்பர் 31-ஆம் தேதி அன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜியோவின் அறிமுக சலுகையானது 3-ஆம் தேதியே முடிவுக்கு வந்தது என்று நம்பப்பட்டது. 
 
ரிலையன்ஸ் ஜியோ தெளிவாக அதன் பொது அறிமுகத்தின் போது வாக்களிக்கப்பட்டது போன்றே வரை அது தடையின்றி இலவச குரல் அழைப்புகள் மற்றும் 4ஜி தரவு சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
 
டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பின்னர் ஜியோ சிம்மை உரிமையாகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகைக்கு பதிலாக ஜியோ வழங்கும் பிற கட்டண சலுகைகள் கிடைக்கப்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :