1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

புதிய சாம்சங் கேலக்ஸி கோர் ஐ 8262 அறிமுகம்

FILE
பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தி மொபைல் தரவரிசையில் முதல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டு வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் சாம்சங் கேலக்ஸி கோர் ஐ 8262 என்ற பெயரில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் இரண்டு சிம் இயக்கம், நான்கு பேண்ட் செயல்பாடு, 3ஜி பயன்பாடு ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 129.3 x 67.6 x 9 மிமீ. எடை 124 கிராம். பார் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4.3 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாடு கிடைக்கிறது.

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளன. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் வசதியுடன், 5 எம்.பி. திறனுடன் கேமரா உள்ளது. இதில் ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம், ஸ்மைல் தெரிந்து இயங்கும் தன்மை ஆகிய வசதிகள் சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பிற்கென முன்புறம் ஒரு வி.ஜி.ஏ. கேமரா உள்ளது.

இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் 8 ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை இயங்குகின்றன. இதன் சிபியு 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். 4.1.2 ஜெல்லி பீன் தரப்பட்டுள்ளது.
FILE

எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., இமெயில், புஷ் மெயில், இண்ஸ்டண்ட் மெசேஜிங் ஆகிய வசதிகளும் உள்ளன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1800 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 14 மணி நேரம் பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.15,449/-