வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

முகப்பருக்கள் வராமல் தடுக்க கையாள வேண்டிய வழிமுறைகள்

முகப்பருக்கள் வராமல் தடுக்க கையாள வேண்டிய வழிமுறைகள்

முகப்பருக்கள் கருப்பு நிறப் பருக்கள், வெண்மை நிறப் பருக்கள் என்று இரு வகையாக இருக்கிறது.


 


சிபாஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகளில் சுரக்கும் சீபம் என்னும் மெழுகு போன்ற பொருளும், மெலானின் நிறமிகளும் சேர்ந்து கருப்பு நிறப் பருக்கள் உண்டாகின்றது.
 
பிரேபியோனி மற்றும் அக்னி எனும் இரு வகையான பாக்டீரியாக்களினால் வெண்மை நிறப் பருக்கள் உருவாகின்றன. இத்தகைய பருக்கள் வெண்மை நுனியும், சிவந்த சுற்றுப்புறத்தையும் உண்டாக்கும்.
 
பருக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க
முகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும். தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
 
சந்தனம், வேம்பு, மஞ்சள் போன்ற மருந்துப் பொருட்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி நாமாக மாத்திரை ,மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.
 
கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
 
இரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.
 
காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
 
மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
 
தலையில் பொடுகுகள் இருந்தால் உடனே அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.