ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் திருச்செந்தூர் முருகன்!!

Sasikala|
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது.

 
தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்து விட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வியாழ பகவானால் பூஜிவால்மீகி ராமாயணத்தில் ‘கபாடபுரம்’ குறிப்பிடப்பட்டிருப்பதால், ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.க்கப்பட்ட காரணத்தால் இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது.
 
குருவின் திருவருள் பூரணமாகக் கிடைக்கும். குரு என்ற கோளுக்கு பரிகார ஆலயம். மேற்கில் இருந்து கிழக்கு நோக்கித் தாழ்ந்தும், நான்கு பக்கமும் சுற்றி வர பாதை உள்ள ஆலயமாக இந்த ஆலயம் உள்ளது. கிழக்கில் ஆர்ப்பரிக்கும் அழகிய கடல் இருக்கிறது.
 
செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.
 
கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே!
 
மேற்குப்பகுதி உயர்ந்தும் தெற்கில் இருந்து வடக்கில் இறைவனை தரிசிக்க இறங்கிச் செல்ல படிப்பட்டுகள் உள்ளன. மூலவரின் பின்புறம் கன்னிமூலையில் பஞ்ச லிங்கங்கள் அமைந்த சன்னதி இருப்பது தலத்திற்குச் சிறப்பளிக்கிறது. சதுரமாக அமைந்த ஆலயம். இறவன் படைத்த வாஸ்துக்கலையின் பல விளக்கங்களுக்கு விடை அளிக்கும் சிறந்த ஆலயம். 
 
முருகனின் படை வீடுகளில் பழனிக்கு அடுத்து மக்களை பெரிதும் ஈர்க்கும் சிறந்த ஆலயம். நக்கீரர் குறிப்பிடும் போது மா இருள் ஞால மறுவின்றி விலங்க பல்கதிர் விரிந்தன்று என்று சிறப்பிக்கிறார், இந்த உலகைச் சூழ்ந்த இருளை நீக்கி ஒளியூட்ட பல சூரியன்கள் உதித்ததைப் போல என அவர் கூறுவது போல் இவ்வூலக மக்களின் இல்லங்களில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்க அருள் வழங்கிக் கொண்டு இறைவன் வாழும் சிறப்பான ஆலயம்.


இதில் மேலும் படிக்கவும் :