வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (12:12 IST)

நவராத்திரியின் முதல் நாளில் செய்யவேண்டிய பூஜை முறைகள் என்ன...?

Kolu First day
அம்பிகையை மகேஸ்வரியாக, மது, கைடபர் போன்ற, அரக்கர்களை வதம் செய்த கோலத்தில் அலங்கரிக்க வேண்டும். இரண்டு வயது சிறுமியை அலங்கரித்து, குமாரி என்ற பெயரில், அம்பாளாக பூஜிக்க வேண்டும். பூஜையறையில், அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக்கோலம் இட வேண்டும்.


மல்லிகை, செவ்வரளி, வில்வமாலைகளை அம்பிகைக்கு சூட்டி, வெண்பொங்கல், சுண்டல், வாழைப் பழம், எலுமிச்சை சாதம், தயிர்ச்சாதம், மொச்சை நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால், செல்வவளம் பெருகும். தீர்க்காயுள் உண்டாகும்.

பாட வேண்டிய பாடல்:

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும்என் புந்தியில் எந்நாளும் பொருந்துகவே.

முதல் நாள் வழிபாடு:

அம்மன் வடிவம்: மகேஸ்வரி
அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை: மல்லிகைப்பூ மாலை
அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை: வில்வம்
அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்: சிவப்பு
அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள்: சிவப்புநிற பூக்கள்
கோலம்: அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.
நைவேத்தியம்: வெண்பொங்கல்
குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது: 2 வயது
பாட வேண்டிய ராகம்: தோடி
பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி: மிருதங்கம்
குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்: சுண்டல்
பலன்: வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.